மத்திய பிரதேசத்தில் நர்மதா ஆற்றை தனியாக கடந்த பெண்ணை தெய்வமாக எண்ணி அனைவரும் வழிபட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நர்மதா ஆற்றில் வயதான பெண் ஒருவர் நடந்து செல்லுகின்ற காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் அனைவராலும் பார்க்கப்பட்டது.
நர்மதா ஆற்றில் தண்ணீரின் மேல் மூதாட்டி நடந்தமையால் அதனை அதிசயம் என நம்பி வியந்து பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
அந்த மூதாட்டியை நார்மதா தேவி என மக்கள் வர்ணனை செய்ததுடன் நர்மதா தேவியின் வடிவத்தில் அந்த மூதாட்டி தண்ணீரில் நடப்பதாக காணொளியில் விளம்பரமும் செய்துள்ளனர்.
குறித்த காணொளி அயல் கிராமங்கள் வரை பரவியதால் நர்மதா தேவி என நினைத்து அந்த மூதாட்டியை வழிபடுவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
அதுமட்டுமன்றி, நர்மதா தேவியின் தரிசனம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் மூதாட்டியின் வீட்டின் முன்பும் ஆயிரக்கணக்கானோர் சென்று காத்திருந்துள்ளனர்.
இவ்வாறாக ஆற்றுத் தண்ணீர் மேல் நடந்த பெண் தெய்வத்தை பார்க்க மக்கள் திரண்ட சம்பவம் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.