Monday, May 6, 2024
HomeLatest News3,820 தொன் யூரியா உரம் -விவசாய அமைச்சிடம் கையளிப்பு..!

3,820 தொன் யூரியா உரம் -விவசாய அமைச்சிடம் கையளிப்பு..!

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட 3,820 தொன் யூரியா உரம் நெல் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக விவசாய அமைச்சிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம், குருநாகல் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள 72,200 ற்கும் மேற்பட்ட சிறுபோக நெல் விவசாயிகளுக்கு இந்த யூரியா உரத்தினை வழங்கப்படவுள்ளனர்.

இலங்கையின் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட 1.5 பில்லியன் ரூபா நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த உரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News