Saturday, May 18, 2024
HomeLatest NewsWorld Newsகொள்ளையடித்த பொக்கிஷங்களை திருப்பி கொடுத்த பிரிட்டன்!

கொள்ளையடித்த பொக்கிஷங்களை திருப்பி கொடுத்த பிரிட்டன்!

கானா நாட்டின் அசான்டே (Asante) சாம்ராஜ்யத்தில் இருந்து சுமார் 150 வருடங்களுக்கு முன் கொள்ளையடித்த கலைப் பொருட்களை பிரிட்டன் அந்த நாட்டுக்கே திருப்பி கொடுத்துள்ளது.இந்த பொருட்கள் அந்த பொருட்கள் கானாவில் உள்ள அசான்டே பிராந்தியத்தின் தலைநகரான குமாசியில் உள்ள மன்ஹியா அரண்மனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.தற்போது குறித்த 32 கலைப் பொருட்களையும் பார்ப்பதற்கு கானா மக்கள் திரண்டுள்ளனர்.குறித்த விடயம் தொடர்பில் அசான்டே அரசர் இரண்டாம் ஓட்டம்போ ஓசி டுட்டு தெரிவிக்கையில், “இது அசான்டேவுக்கு ஒரு முக்கியமான நாள். கறுப்பின ஆப்பிரிக்க கண்டத்துக்கும் முக்கியமான ஒரு நாள். நாங்கள் ஆத்மார்த்தமாக மதிக்கும் அற்புதமான ஒன்று மீண்டும் எங்களிடம் வந்துவிட்டது,” என அசான்டே அரசர் இரண்டாம் ஓட்டம்போ ஓசி டுட்டு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தக் கலைப்பொருட்கள் கானாவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கடனை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களுக்கும் அசான்டே மன்னருக்கும் இடையே கையெழுத்திடப்படுள்ளது. (விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்) கானா அரசாங்கத்துக்கு இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தம் இல்லை. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News