Thursday, May 2, 2024
HomeLatest NewsLGBTQ சமூகத்தின் கொடியை பறக்க விட்ட பெண் அமெரிக்காவில் சுட்டுக்கொலை…!

LGBTQ சமூகத்தின் கொடியை பறக்க விட்ட பெண் அமெரிக்காவில் சுட்டுக்கொலை…!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் தனது கடையில் LGBTQ சமூகத்தின் கொடியை பறக்க விட்டதால் ஏற்பட்ட தகராற்றில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் சான் பெர்னார்டினோ கவுன்ட்டி பகுதியில் சிறிய துணிக்டையொன்றை வைத்திருந்தவரான 66 வயதான லாரா ஆன் கார்லேடன் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து அறிய வருவதாவது குறித்த பெண் தனது கடையின் முன்.கொடியை ஏற்றியுள்ள நிலையில் கடையினுள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் இவருடன் வாக்குவாதத்துடன் ஏற்பட்ட பின் மறைந்திருந்து இவரைச் சுட்டுக்கொன்றுள்ளார்.

இதேவேளை சம்பவமறிந்த பொலிசார் உடனே அவரைத் துரத்திச் சென்று பிடித்த போதும அவர் பொலிசாரை நோக்கியும் சுட்டுள்ளார். இந் நிலையில் பதிலுக்கு பொலிசார் நடாத்திய சூட்டில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

எது எவ்வாறாயினும் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட லாரா தன்னை LGBTQ சமூக உறுப்பினராக அறிவிக்காத போதும் குறித்த அமைப்பு சார் ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாக அறியப்படுகின்றது. இச் சம்பவம் குறித்து சான் பெர்னார்டினோ கவுன்ட்டி பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Recent News