Thursday, January 23, 2025
HomeLatest Newsமுட்டையை பதுக்கினால் இனிச் சிக்கல்- வெளியான விசேட அறிவிப்பு!

முட்டையை பதுக்கினால் இனிச் சிக்கல்- வெளியான விசேட அறிவிப்பு!

முட்டைகளை பதுக்கி வைக்கும் நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை, செயற்கையாக முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் நாடகமாட முயற்சிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன், கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளை தேடி நுகர்வோர் அதிகாரசபையினர் சோதனை நடத்தியதில், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த சில வியாபாரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதேவேளை, தற்போதைய சந்தை நிலவரத்தை கருத்திற் கொண்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வது சிக்கலாக உள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் 55 ரூபாய் விலை கொடுத்தால் சந்தையில் முட்டை தட்டுப்பாடு தவிர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

ஆனால் முட்டை விலையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்காது என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Recent News