Monday, April 29, 2024
HomeLatest Newsஏன் விமானங்கள் நேர்வழிப் பாதையில் பயணம் செய்வதில்லை? உங்களுக்கு தெரியுமா?

ஏன் விமானங்கள் நேர்வழிப் பாதையில் பயணம் செய்வதில்லை? உங்களுக்கு தெரியுமா?

நீண்ட விமானப் பயணங்கள் சுமையானதும், சோர்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலானதுமாகவே அமைகின்றன. அடிக்கடி பயணம் செய்வோருக்கே இந்த சுமையை உணர முடிகின்றது. நீண்ட விமானப் பயணங்கள் அச்சம் ஏற்படுத்துபவையாகவே காணப்படுகின்றன.

அந்த வகையில் உலகின் மிக நீண்ட விமானப் பயணம் எந்த இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படுகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா?

உலகின் மிக நீளமான விமானப் பயணப் பாதை வர்த்தக ரீதியான விமானப் பயணங்களின் போது மிகவும் நீளமான விமானப் பயணமாக அமெரிக்காவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பயணப் பாதையை குறிப்பிட முடியும்.

எவ்வாறெனினும் நேர்வழிப் பாதையில் இந்த விமானப் பயணம் நடைபெறுவதில்லை என்பது சுவராஸ்மான ஓர் தகவலாகும்.

இரு நாடுகளுக்கும் இடையில் சுமார் 9527 மைல்கள் அல்லது 15300 கிலோ மீற்றர் தூரம் விமானம் பயணம் செய்கின்றது.

நியூயோர்க்கின் குயின்ஸில் அமைந்துள்ள ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தில் பயணத்தை ஆரம்பித்து சிங்கப்பூரின் ச்சான்கீ விமான நிலையத்தில் தரையிறக்கப்படுகின்றது.

18 மணித்தியாலங்கள் 50 நிமிடங்கள் வரையில் விமானம் வானில் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் விமானங்கள் நேர்வழிப் பாதையில் பயணம் செய்வதில்லை?

ஆசிய பிராந்தியத்திற்கான விமானப் பயணங்களை மேற்கொள்ளும் விமானங்கள் நேர் வழிப் பாதையில் பயணிப்பதில்லை மாறாக வளைந்த பாதையில் பயணிக்கின்றது.

இவ்வாறு வளைந்த பாதையில் விமானங்கள் பயணிப்பது பாதுகாப்பானது என்பதுடன் மிகவும் வேகமானது என தெரிவிக்கப்படுகின்றது. பூமி நேராக இல்லை எனவும் நேர் கோட்டில் பயணிப்பது தூரத்தை அதிகரிக்கும் எனவும் வளைவாக பயணிப்பதனால் தூரத்தை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவிலிருந்து ஆசியா அல்லது வேறும் ஓர் நாட்டுக்கு பயணித்தால் அதன் போது வேகமாகவும், எரிபொருளை குறைவாகவும் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு இந்த வளைவு முறை பாதையின் ஊடாக கிடைக்கப் பெறுகின்றது.

பிற செய்திகள்

Recent News