Monday, May 13, 2024
HomeLatest NewsWorld Newsமாலைதீவுக்குள் மீண்டும் நுழைந்த சீன உளவுக்கப்பல்!

மாலைதீவுக்குள் மீண்டும் நுழைந்த சீன உளவுக்கப்பல்!

மாலைதீவுக்குள் (Maldives) 4,500 டன் எடையுள்ள சியாங்- யாங்- ஹாங்-3 என்ற சீன(China) உளவு கப்பல் மீண்டும் வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த கப்பல் மாலைதீவின் மாலேவுக்கு மேற்கு சுமார் 7.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திலாபுஷி என்ற துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் லட்சத்தீவில் உள்ள மினிசாங் தீவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் இந்த துறைமுகம் அமைந்து உள்ளது. இங்கிருந்தபடி மிக எளிதாக இந்தியாவை உளவு பார்க்க முடியும்.இது சாதாரண ஆய்வு கப்பல் என சீனா கூறினாலும் அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய உளவு கப்பல் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த கப்பல் மாலைதீவு கடற் பகுதியில் எந்தவித ஆராய்ச்சி பணியிலும் ஈடுபடாது என அந்நாட்டு வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.ஆனால் எதற்காக இந்த உளவு கப்பல் மாலைதீவு வந்துள்ளது. எத்தனை நாட்கள் இக்கப்பல் மாலைதீவில் நிறுத்தி வைக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.மாலைதீவின் இந்த நடவடிக்கை அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதால் இந்திய கடற்படை பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recent News