Saturday, May 4, 2024
HomeLatest Newsஉலகின் மிக உயரமான பெண்ணின் முதல் விமானப் பயணம்!(படங்கள் இணைப்பு)

உலகின் மிக உயரமான பெண்ணின் முதல் விமானப் பயணம்!(படங்கள் இணைப்பு)

உலகின் மிக உயரமான பெண் (25) தனது வாழ்வில் முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்த சம்பவம் தற்போது சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மிகவும் உயரமான மனிதர்கள் பேருந்து, ரயில், விமானம் போன்றவைகளில் பயணிக்கும் போது சிரமங்கள் பலவற்றை சந்திப்பார்கள்.

இந்நிலையில் அதே சிரமத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வந்தவர்தான் துருக்கியின் Rumeysa Gelgi (25). உலகின் உயரமான பெண்ணாக அறியப்படும் இவரின் உயரம் 7 அடி 7 அங்குலம்.

தனது உயரம் காரணமாக Rumeysa வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், துருக்கியை சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று Rumeysa கெல்கிக்காக தங்களது விமானத்தில் மாற்றம் செய்து ஆறு இருக்கைகள் அகற்றப்பட்டு அது இருந்த இடத்தில் படுக்கை ஒன்றை அமைத்து Rumeysa வசதியாக ஓய்வெடுத்தபடி பயணம் செய்ய வைத்திருக்கிறது.

இதன் மூலம், 13 நேர பயணத்திற்குப் பிறகு துருக்கியிலிருந்து அமெரிக்காவுக்கு Rumeysa கெல்கி சென்றடைந்திருக்கிறார்.

இது தொடர்பான புகைப்படங்களை Rumeysa வெளியிட்டுள்ளதுடன், விமான ஊழியர்களின் சேவையையும் பாராட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாது இது தனது முதல் விமானப் பயணம் என்றாலும், நிச்சயமாக தன்னுடைய கடைசி பயணமாக இருக்காது எனவும் Rumeysa தெரிவித்துள்ளார்.   

பிற செய்திகள்

Recent News