Friday, January 24, 2025
HomeLatest Newsலண்டனில் உச்சம்தொட்ட உணவுப்பொருட்களின் விலை!

லண்டனில் உச்சம்தொட்ட உணவுப்பொருட்களின் விலை!

லண்டனில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக  உணவு வங்கி துவங்கி ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வல்லரசு நாடான இங்கிலாந்தில் தற்போது பால் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், லண்டனில் அறக்கட்டளை மூலமாக உணவு வங்கி ஏற்பாடு செய்து ஏழைகள், முதியவர்களுக்கு உணவு வழங்கப்படுகின்றது.

இதற்கமைய, முன்பதிவு செய்து உணவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்தாண்டில் நிதி உதவி வழங்கியவர்கள் கூட தற்போது உதவி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் உணவு வங்கி மேலாளரொருவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Recent News