Saturday, May 4, 2024
HomeLatest Newsஇனி வீட்டில் இருந்தவாறே புற்றுநோயை கண்டறியலாம்..!புதிய செயலி அறிமுகம்…!

இனி வீட்டில் இருந்தவாறே புற்றுநோயை கண்டறியலாம்..!புதிய செயலி அறிமுகம்…!

பொறியியலாளர் ஒருவர் வீட்டில் இருந்தவாறே புற்று நோயை கண்டறியக் கூடிய வகையிலான செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

இந்த செயலி, தோல் புற்றுநோய் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்கக்கூடிய செயலி என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் டொரன்டோவில் வசித்து வரும் ஹார்ஷ் ஷா, என்ற பொறியியலாளரே இந்த ஸ்கின் செக்அப் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார்.

இவர், இதற்கு முன்னர் டெஸ்லா, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற மோட்டார் போக்குவரத்து தொழில் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

கனடாவில் தோல் மருத்துவ நிபுணர் ஒருவரை சந்திப்பதற்கு அல்லது அவரிடம் ஆலோசனை பெறுவதற்கு சராசரியாக கனடியர்கள் கிட்டத்தட்ட 90 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக ஷா தெரிவித்துள்ளார்.

ஆகவே, இனி இந்த புதிய செயலியின் ஊடாக தோளில் ஏற்படக்கூடிய நோய் நிலைமைகளை கண்டறிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் முறைமை ஆகிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் நோய்க்காரணிகள் கண்டறியப்படுவதாக ஷா கூறியுள்ளார்.

அந்த வகையில், மருத்துவமனைக்குச் செல்லாது வீட்டில் இருந்தவாறே தோல் புற்றுநோய் தொடர்பில் பரிசோதனைகளை செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News