Saturday, May 4, 2024
HomeLatest Newsஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கி அரசு அமைக்கப்பட வேண்டும் - ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வலியுறுத்தல்…..!

ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கி அரசு அமைக்கப்பட வேண்டும் – ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வலியுறுத்தல்…..!

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கி அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென இந்தியா தலைமையில் இடம்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது. இத் தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

குறித்மாநாட்டில் இந்தியா , சீனா , கஜகஸ்தான் , கிர்கிஸ்தான் , பாகிஸ்தான் , தஜிகிஸ்தான் ,உஸ்பெகிஸ்தான் ஆகியநாடுகளின் கூட்டமைப்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஆப்கானிஸ்தான் , பெலாரஸ் , கம்போடியா , நேபாள் , துருக்கி , இலங்கை ஆகிய நாடுகள் கலந்துரையாடல்களை மேற்கொள்பவர்களாகவும் இணைந்துள்ளனர்.

இந்தியா தலைமையில் நடைபெற்ற குறித்த மாநாடானது நேற்றுடன் நிறைவுற்றது. இதில்ஆப்கனிஸ்தானின் தற்போதைய நிலை கவலையளிப்பதாகவும் ஆப்கினித்தானிலுள்ள அனைத்து இனக் குழுக்கள் , மதக் குழுக்கள மற்றும் அரசியல் குழுக்களை ஒன்றிணைத்து அரசு அமைப்பது சிறப்பானது என ஷங்காய் ஒத்துழைப்பு இயக்கம் அழைப்பு விடுத்தது.

இதேவேளை குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளின் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்காப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஆப்கானிஸ்தானின் நிலைமை சீரடைவது முக்கியமானதென உறுப்பு நாடுகள் நம்புகின்றன. பயங்கரவாதம் , போதைப்பொருள் மற்றும் போர் அற்ற நாடாக மாற்றங்கண்டு சுதந்திரமான நடுநிலையான ஜனநாயக நாடாக உருவெடுக்க வேண்டுமென்பதே குறித்த அமைப்பின் நோக்கமாகவுள்ளது.

Recent News