Friday, March 31, 2023
HomeLatest Newsஉலகளவில் மிகவும் பிரபலமான 'டொப்லெரோன்' சொக்லட்டில் ஏற்படும் மாற்றம்!

உலகளவில் மிகவும் பிரபலமான ‘டொப்லெரோன்’ சொக்லட்டில் ஏற்படும் மாற்றம்!

உலகளவில் மிகவும் பிரபலமான டொப்லெரோன் (Toblerone) சொக்லட் இணை சுற்றியுள்ள உறையிலுள்ள மேட்டேர்ஹோர்ன் (Matterhorn) சிகரத்தின் படம் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சொக்லட் சுவிட்ஸர்லந்தில் தயாரிக்கப்படுவதுடன், இதன் தயாரிப்பு தற்போது சுலோவாக்கியாவுக்கு மாற்றப்படுகின்றது.

இதன் காரணமாகவே குறித்த படம் நீக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.

மேட்டேர்ஹோர்ன் (Matterhorn) சிகரத்திற்குப் பதிலாக பொதுவான சிகரம் ஒன்றின் வடிவம் உறையில் சேர்க்கப்படும் என மொன்டெலெஸ் (Mondelez) நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுவிட்ஸர்லந்தில் தயாரிக்கப்படாத பால் உற்பத்தி பொருட்களில் அந்நாட்டின் தேசியச் சின்னங்களைப் பயன்படுத்த அனுமதியில்லை என்பதால் குறித்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

மொன்டெலெஸ் (Mondelez) நிறுவனத்தின் தயாரிப்புக்களை விரிவுபடுத்துவதற்காக குறித்த இட மாற்றங்கள் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.  

Recent News