Friday, March 31, 2023
HomeLatest Newsநியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- 6.9 ரிக்டர் ஆக பதிவு!

நியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- 6.9 ரிக்டர் ஆக பதிவு!

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று திடீரென்று அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது ரிக்டர் அளவுகோலில் 6.9 என பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

 குறித்த நிலநடுக்கம் 152 கிமீ (94 மைல்) ஆழத்தில் இருந்ததாக USGS தெரிவித்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.மேலும் சேத பாதிப்பு பற்றிய எந்த விபரமும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

Recent News