தென் அமெரிக்கா நாடான ஈக்வடாரில் வருகின்ற 20 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள 8 பேரில் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பத்திரிகையாளரான பெர்னாண்டோ வில்லிவிசென்சியோ தலைநகர் குயிட்டோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரத்தை முடித்து கொண்டு காரில் ஏறி புறப்பட தயாரான போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதியில் பெர்னாண்டோ உயிரிழந்துள்ளார்.
இதை தொடர்ந்து குற்றவாளிகளை தேடும் நடவடிக்கையை அடுத்து தலைநகர் குயிட்டோவில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ஆறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 6 பேரும் கொலம்பியா நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நாடு முழுவதும் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.