Friday, May 17, 2024
HomeLatest NewsWorld Newsபாக்கிஸ்தான் பயங்கரவாதிக்கு ரகசியங்கள் பரிமாற்றம் -பாதுகாப்பு படை அதிகாரி கைது..!

பாக்கிஸ்தான் பயங்கரவாதிக்கு ரகசியங்கள் பரிமாற்றம் -பாதுகாப்பு படை அதிகாரி கைது..!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த கபில் என்ற ஜெகதீஷ் பாய் முராரி மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சி.ஐ.எஸ்.எப் வீரராக உள்ளார். இவருக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இரும்பு உருக்காலையில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த தமிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கபிலின் செல்போனுக்கு அடிக்கடி பாகிஸ்தானில் இருந்து அழைப்புகள் வருவதை இந்திய உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்ததை அடுத்து அவரது செல்போன் உரையாடல் குறித்து ரா அமைப்பு விசாரித்தது.


அதில் இரும்பு உருக்காலை மற்றும் தொழில் நுட்ப ரகசியங்கள் மற்றும் இந்திய நாட்டு ரகசியங்கள் குறித்து பாகிஸ்தான் பெண்ணுக்கு கபில் உளவு சொன்னது தெரிந்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் பெண் குறித்து ரா அமைப்பு விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


அதில் அந்த இளம்பெண் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஒருவரின் தனிப்பட்ட உதவியாளர் என்பதும், கபிலுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு இந்திய நாட்டு ரகசியங்களை அறிந்து தங்களது தீவிரவாத அமைப்புக்கு தெரிவித்து வந்ததும் தெரிந்தது.

அதையடுத்து குறித்த வீரரிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்ததோடு இதுகுறித்து விசாகப்பட்டினம் கமிஷனர் விக்ரம வர்மா உத்தரவின் பேரில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி கபில் மீது வழக்கு பதியப்பட்டு கபீல் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News