Sunday, May 19, 2024
HomeLatest NewsWorld Newsவிண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்யாவின் லூனா - 25..!

விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்யாவின் லூனா – 25..!

நிலவினுடைய தென்துருவத்தை ஆராய ரஷ்யா உருவாக்கிய லூனா 25 என்ற விண்கலம் ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்ட பாதையை அடைந்து, அங்கு 5 முதல் 7 நாட்கள் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது. இதற்காக மூன்று இடங்களை ரஷிய விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.

நிலவில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து லூனா-25 ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021-ம் ஆண்டே விண்கலத்தை ஏவ திட்டமிட்டு, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டதாகவும் இருப்பினும் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News