Tuesday, December 24, 2024
HomeLatest Newsடொலருக்கு மாற்றீடாக யுவானை சர்வதேச ரீதியாக அமுல்படுத்த சீனா வியூகம்....!

டொலருக்கு மாற்றீடாக யுவானை சர்வதேச ரீதியாக அமுல்படுத்த சீனா வியூகம்….!

அமெரிக்கா டொலர் சர்வதேச அளவில் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தமது நாட்டின் பண அலகான யுவானை உலகமயமாக்க சீனா தற்போது முயற்சிகளை எடுத்து வருகின்றது.

இரண்டாம் உலகப் போரின் போது பலவீனமடைந்த நாடுகளுக்கு அமெரிக்கா கடனுதவி வழங்கியதன் நிமிர்த்தம் அமெரி்காவின் பணமான டொலர் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பண அலால மாற்றங் கண்டது.

தற்போது வரை அந்நிய செலாவணி சந்தையில் மொத்த வரம்பில் 85 சதவீதத்திற்கு அதிகமான இடத்தை அமெரிக்கா டொலர் பிடித்து வைத்துள்ளது. இது இவ்வாறிருக்க இதனைத் தளர்த்த சீனாவும் ரஷ்யாவும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

இதனடிப்படையில் தமது நாட்டு பண அலகான யுவானை சர்வதேச நாணயமாக மாற்றும் முயற்சியின் பொருட்டு 24 பெரிய நிறுவனங்கள் யுவானில் வர்த்தகம் மேற்கொள்ள இருக்கின்றது. இது இவ்வாறிருக்கையில் இப் பெரிய நிறுவனங்கள் யுவானில் வர்த்தகத்தை மேற்கொள்ள ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் ஏனைய சிறு சிறு நிறுவனங்களும் யுவானின் பக்கம் சாய வாய்ப்புக்கள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளான அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பான உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டிலுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் சீன நிறுவனங்கள் தொழில் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது சீனாவானது பொருளாதாரத்தில் நிலையானதாகவும் பலமாகவும் உள்ள காரணத்தினால் இந்த முடிவை.எடுத்துள்ளது. எது எவ்வாறாயினும் இம் மாற்றத்தால் சீனாவுக்கு சில சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

Recent News