Sunday, May 12, 2024
HomeLatest Newsரஷ்ய துருப்புக்கள் வாபஸ் பெற்றால் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை...!ஜெலன்ஸ்கி திட்டவட்டம்...!

ரஷ்ய துருப்புக்கள் வாபஸ் பெற்றால் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை…!ஜெலன்ஸ்கி திட்டவட்டம்…!

ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பிராந்தியத்தில் இருந்து, ரஷ்ய துருப்புக்கள் வாபஸ் பெற்ற பின்னரே அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன்- ரஷ்ய போரானது ஒன்றரை ஆண்டுகளை கடந்து நடந்து வரும் நிலையில், உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் உக்ரைன், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் பதில் தாக்குதல் நடத்தி ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை மீட்பதற்காக தீவிர முயற்சி எடுத்து வருகின்றது.

இவ்வாறான சுழலில், ஆப்பிரிக்க தலைவர்கள் இரு நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர்.

அதன் முதலாவது கட்டமாக அவர்கள் நேற்றைய தினம் உக்ரைன் அதிபரை சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை நடத்திய போது பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உக்ரைன் அதிபர், ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பிராந்தியத்தில் இருந்து, ரஷ்ய துருப்புக்கள் வாபஸ் பெற்ற பின்னரே அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆப்பிரிக்கா தலைவர்கள்,ரஷ்ய அதிபரை சந்திக்க உள்ளனர். இது அவர்களின் முடிவு என்றாலும் இது எப்படி பொருத்தமுடையதாக இருக்கும் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்புக்காரர்கள் தமது நிலத்தில் உள்ள போது, ரஷ்யாவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் தயாராகுவது என்பது தமது நிலத்தை முடக்குவது மட்டுமன்றி அது எல்லாவற்றையும் முடக்குவதற்கு சமனானது என்றும் அது துன்பமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமக்கு உண்மையான அமைதி தேவை என்றும் அதற்கு தமது நிலத்தில் இருந்து ரஷ்ய துருப்புகள் உண்மையாகவே வெளியேற வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், ஆப்பிரிக்க தலைவர்கள் இன்றைய தினம் ரஷ்ய அதிபரை சந்திக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News