Saturday, May 11, 2024
HomeLatest Newsபிரான்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...!உறைந்து போன மக்கள்...!

பிரான்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…!உறைந்து போன மக்கள்…!

பிரான்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அங்கு உள்ளூர் நேரப்படி நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

இதையடுத்து, பிரான்ஸ் மந்திரி கிறிஸ்டோபர் பெச்சு இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி, பிரான்ஸின் நிலப்பரப்பு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது மிகவும் அரிதானது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும், மின்சாரம் தடைபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சுற்றுலா நகரமான லாய்ரே ரிவர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், நிலநடுக்கம் ஏற்பட்ட வேளை தான் படித்துக் கொண்டிருந்ததாகவும் உடனடியாக எழுந்து நின்ற தான் அவ்வாறே உறைந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அப்பார்ட்மென்ட் முழுவதும் அதிர்ந்ததுடன் அது சில நொடிகள் இது நீடித்ததாகவும் தான் இருந்த 3 ஆவது மாடி மண்ணில் புதைவதாக எண்ணியதாகவும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2000 ஆம் ஆண்டு இது போன்ற சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News