Wednesday, December 25, 2024
HomeLatest Newsதிடீர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த இஸ்ரேல்!

திடீர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த இஸ்ரேல்!

பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலின் எல்லைப் பகுதியான காசாவில் நேற்று இஸ்ரேலின் விமானங்கள் திடீர் குண்டு மழைகளைப் பொழிந்ததாகவும் இதில் 10 ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்கள் ‘இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவை’ சேர்ந்தவர்கள் என இஸ்ரேல் தெரிவிக்கின்றது.

கடந்த வாரத்தில் பாலஸ்தீன பேராளி ஒருவரை இஸ்ரேல் கைது செய்ததைத் தொடர்ந்து பாலஸ்தீன போராளிகள் ஏவுகணைகள் மூலம் பதிலடிகலைக் கொடுத்திருந்ததாகவும் இந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலாகவே விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

சிறிது காலம் அமைதியாக இருந்த காசாவில் தற்போது மீண்டும் குண்டுகள் விழத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Recent News