Friday, April 19, 2024
HomeLatest Newsவிரிவடைகிறது இந்தியா – சிங்கப்பூர் சுற்றுலாத்துறை!

விரிவடைகிறது இந்தியா – சிங்கப்பூர் சுற்றுலாத்துறை!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாரிய வீழ்ச்சியை சந்தித்திருந்த சுற்றுலாத்துறை மீண்டும் திறக்கப்படுவதாகவும், இந்த சுற்றுலாத்துறையில் இந்தியர்களுக்கு பல சிறப்புச் சலுகைகள் காத்திருப்பதாகவும் சிங்கப்பூர் சுற்றுலாத்துறைத் தலைவர் ‘ரென்ஜி வொங்’ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது சிங்கப்பூரின் கடந்த கால சுற்றுலாத்துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் இந்தியர்கள். கடந்த 2021ம் ஆண்டில் சுமர் 1.5 மில்லியன் இந்தியர்களை சிங்கப்பூர் சுற்றுலா விருந்தாளிகளாக பெற்றிருந்தது.

இந்த நிலையில் இந்தியாவிற்கும் சிங்கப்பூரிற்கும் இடையில் மீண்டும் சிறப்பு விசேட சலுகைகளுடன் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளோம்.

இந்தியாவின் பல நகரங்களில் இருந்தும் சிங்கப்பூரிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். இந்த உறவு இந்தியாவிற்கும் சிங்கப்பூரிற்கும் இடையிலான உறவில் பல புதிய நன்மைகளை கொடுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும்” ‘வொங்’ தெரிவித்துள்ளார்.

Recent News