Friday, April 19, 2024
HomeLatest Newsபோதைப் பொருள் கடத்த முயன்ற 14 இலங்கையர்களிடம் என்ஐஏ விசாரணை!

போதைப் பொருள் கடத்த முயன்ற 14 இலங்கையர்களிடம் என்ஐஏ விசாரணை!

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 14 இலங்கையர்கள் இந்தியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கும்பலிடம் இருந்து 60 செல்போன்கள் மற்றும் 50 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கேளம்பாக்கம் அருகே தையூரில் உள்ள ஒரு வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திடீர் சோதனை நடத்திய போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

திருச்சி மத்திய சிறைக்கு அருகில் உள்ள வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமில் கடந்த ஜூலை 20ஆம் திகதி என்ஐஏ குழுவினர் சோதனை நடத்தினர்.

போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 14 இலங்கையர்களை இந்தக் குழு விசாரித்தது.

சோதனையின் போது, என்ஐஏ குழு 60 செல்போன்கள் மற்றும் 50 சிம் கார்டுகளுடன் ஒரு மடிக் கணினியையும் கைப்பற்றியிருந்தனர்.

முகாமில் உள்ள குறைந்தபட்சம் 14 கைதிகள் பாகிஸ்தானில் இருந்து கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கைதிகள் இந்தியாவிலும் இலங்கையிலும் இயங்கி வருவதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

Recent News