Sunday, May 5, 2024
HomeLatest NewsWorld Newsரஷியா எதற்கு இங்கு? - கேள்வி எழுப்பிய உக்ரைன் அதிபர்..!

ரஷியா எதற்கு இங்கு? – கேள்வி எழுப்பிய உக்ரைன் அதிபர்..!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலகத் தலைவர்களின் ஆதரவை ஜெலன்ஸ்கி நாடுவதோடு ரஷியாவை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், ராணுவ உதவிகளை செய்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், உறுதியான எதிர்நடவடிக்கைகளை எடுக்காது நேட்டோ படையில் சேர்ப்பதாக தெரிவித்து, அதன் மாநாட்டில் அதுகுறித்து முடிவு எடுக்கப்படாமல் விடப்பட்டது.

உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து ஐ.நா. கண்டனம் தெரிவித்த போதிலும் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஐ.நா.வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி , எங்களை பொறுத்தவரை, எங்குடைய அனைத்து வார்த்தைகள், அனைத்து மெசேஜ்கள் என அனைத்தையும் எங்களுடைய பார்ட்னர்களால் கேட்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். இன்னும் ஐ.நா. அவையில் ரஷியா உறுப்பினர்கள் இருந்தால் அது பரிதாபத்திற்குரியது. ஆனால், இருக்கிறார்கள். ரஷிய பயங்கரவாதிகளுக்காக இங்கே இடம் இருக்கிறது. இந்த கேள்வி எனக்கானது அல்ல. ஐ.நா. அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்குமான கேள்வி என நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

Recent News