Sunday, May 19, 2024
HomeLatest NewsWorld Newsகாலிஸ்தான் பயங்கரவாதி கொலை தொடர்பில் இந்திய அதிகாரி பதவி நீக்கம்..!

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை தொடர்பில் இந்திய அதிகாரி பதவி நீக்கம்..!

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் கனடா நாட்டில் அதிக அளவில் உள்ளனர்.


காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கனடா தெரிவிக்கப்பட்ட போதிலும், அங்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.


இதனால்தான் ஜி20 மாநாட்டின்போது, பிரதமர் மோடி- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையே மகிழ்ச்சிகரமான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.


இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டி இந்தியாவின் உயர் தூதர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியுள்ளது.
ஏற்கனவே இந்தியா- கனடா இடையிலான ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

Recent News