Thursday, January 23, 2025

ஜிங்க் குறைபாட்டை ஈடுசெய்ய உட்கொள்ளவேண்டிய உணவுவகைகள்! 

உடலின் பல இயக்கங்களுக்கு தேவைப்படும் முக்கிய நுண்ணிய ஊட்டச்சத்துகளில் ஒன்று ஜிங்க். இது நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் காய்கறிகள் மற்றும் அசைவத்திலிருந்தே உடலுக்குக் கிடைக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜிங்க், சரும ஆரோக்யம், காயங்களை ஆற்றுதல் மற்றும் அலர்ஜி போன்றவற்றில் முக்கியப் பங்காற்றுகிறது. முட்டை, மாமிசம் மற்றும் கடல் உணவுகளில் ஜிங்க் நிறைந்திருப்பது தெரிந்த பலருக்கும் காய்கறிகளிலேயே இந்த ஊட்டச்சத்து நிறைந்திருப்பது தெரிவதில்லை.

ஒரு நாளில் பெண்களுக்கு 8 மிகி ஜிங்க்கும், கர்ப்பிணிகள், ஆண்களுக்கு 11 மிகி ஜிங்க்கும் தேவைப்படுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு 12 மிகி ஜிங்க்கும் தேவைப்படுகிறது.

முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது. காரணம் இவற்றில் நார்ச்சத்து மற்றும் அதிமிகுந்த ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. கோதுமை, அரிசி, கம்பு மற்றும் வரகரிசி போன்றவற்றில் ஜிங்க் அதிகம் உள்ளது. இந்த உணவுகளை பலவகைகளில் சமைத்து தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் மட்டுமல்ல; ஜிங்கும் நிறைந்துள்ளது. சீஸ் முதல் பால்வரை அனைத்து விதங்களிலும் பால் பொருட்களை தினசரி சேர்த்துக்கொள்ளலாம். இஅவ்ற்றில் புரதம், வைட்டமின் டி மற்றும் இதர ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது.

ஊட்டச்சத்துகளின் பவர்ஹவுஸ் என நட்ஸ்களைக் கூறலாம். நிலக்கடலை, பைன் கொட்டைகள், முந்திரி மற்றும் பாதாமில் ஜிங்க் நிறைந்துள்ளது. தனியாக சாப்பிட விரும்பாதவர்கள் நறுக்கிய நட்ஸ்களை ஓட்ஸ் மற்றும் தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்.

இதனைப் பற்றி மேலதிக தகவலை அறிந்துகொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos