Saturday, April 20, 2024

ஈராக்கில் தீயாக பரவும் விசித்திர காய்ச்சல்

ஈராக்கில் இரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தம் கிரீமியன் கொங்கோ ஹீமோஹாகிக் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.

விலங்கில் இருந்து மனிதருக்கு பரவும் இந்தக் காச்சில் ஈராக்கின் கிராமப்புறங்களில் பொதுவான ஒன்றாக மாறியுள்ளது.

இதன் காரணமாக ஈராக் சுகாதார ஊழியர்கள் முழுமையான பாதுகாப்பு உடை அணிந்தபடி மாடுகளுக்கு நோய் தடுப்பான்களை தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு மட்டும் ஈராக்கில் 111 பேருக்கு இந்தக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், 19 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தக் காய்ச்சல் மூக்கு வழியாகவோ அல்லது உடலின் உள்ளேயே இரத்தப் போக்கு ஏற்படச் செய்யும். ஐந்தில் இரண்டு பேர் இந்த காய்ச்சல் மூலம் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காய்ச்சல் மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் பலமடங்கு அதிகரித்துள்ளது. ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள விவசாய பகுதியில் இந்த வகையான காய்ச்சலுக்கு பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

1979 ஆண்டு ஈராக்கில் இந்த காய்ச்சல் முதல் முறையாக கண்டறியப்பட்டது தொடக்கம் தற்போது அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

Latest Videos