இங்கிலாந்து சாம்ராஜ்ஜியத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி பிரான்சின் ஈபிள் கோபுரத்தின் விளங்குகள் நேற்றிரவு அணைக்கப்பட்டன.
உலகின் அதிசயமாக தொடர்ந்து வரும் ஈபிள் கோபுரம் கடந்த 1997ம் ஆண்டு இளவரசி டயானாவின் மரணத்திற்கு இவ்வாறு அணைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் நேற்றிரவு மகாராணியாரின் மரணத்தையொட்டி அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டதன் மூலம் மகாராணியார் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு கடந்த 70 வருட ஆட்சிக் காலத்தின் போது செய்த நன்மைகள் மற்றும் பல சாதகமான விடயங்கள் என்பன பிரான்ஸ் நாட்டு மக்களினால் நினைவு கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.