Tuesday, December 24, 2024
HomeLatest News74 ஆண்டுகளாக ஓய்வின்றி வேலை..!90 வயது மூதாட்டி சாதனை..!

74 ஆண்டுகளாக ஓய்வின்றி வேலை..!90 வயது மூதாட்டி சாதனை..!

மூதாட்டி ஒருவர் 74 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் விடுமுறை எடுக்காது பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த 90 வயதான மெல்பா மெபேன் என்பவரே இவ்வாறாக 74 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

மெல்பா, தனது 16 ஆவது வயதில் தனியார் நிறுவனத்தில் வேலைக்காக சேர்த்துள்ளதுடன் அங்கு
ஷாப்பிங் மாலில் லிஃப்ட் ஆபரேட்டராக வேலை செய்யத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், அதே நிறுவனத்தின் ஆடை மற்றும் அழகுசாதனப் பிரிவில் 74 ஆண்டுகளாக இடைவிடாது பணியாற்றியுள்ளார்.

இவ்வளவு, ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் வேலை செய்த இவர் தனக்கு 90 வயது எட்டியதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் தான் வேலைக்கு சென்று பணியாற்றும் சேவைக்கு ஓய்வினை வழங்கியுள்ளார்.

தற்பொழுது, மெல்பா வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் தனியாக இருப்பது மிகவும் துயரமான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மெல்பா பணிபுரிந்த ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்துள்ளதாக தனியார் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News