Friday, November 22, 2024
HomeLatest News75,000 ஆண்டிற்கு முன் இறந்த பெண் - மீண்டும் வந்த அதிசயம் ஆராய்ச்சியாளர்களின் திகில் தகவல்...

75,000 ஆண்டிற்கு முன் இறந்த பெண் – மீண்டும் வந்த அதிசயம் ஆராய்ச்சியாளர்களின் திகில் தகவல் !

ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்கள் போலவே நியாண்டர்தால் மனிதர்கள் சுமார் 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்தார்கள் என்று கூறப்படுகிறது.இந்த மனிதர்கள் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் முழுவதுமாக அழிந்துவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் 75,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நியாண்டர்தால் பெண்ணை மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.இதற்காக ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள ஷனிதர் குகையில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு நியாண்டர்தால் பெண்ணின் உடம்பு, முதுகெலும்பு, தோள்பட்டை, கைகள் போன்ற எலும்புகளை எடுத்துள்ளனர்.

அந்த எலும்புகள் மிகவும் மென்மையாகவும், வளைவு நெளிவுகள் பெரிதளவில் இல்லாமல் தட்டையாக இருந்துள்ளது. இதனால் முதலில் எலும்புத் துண்டுகளை திடமாக மாற்றி அதனை ஒன்று சேர்த்துள்ளனர்.பின்னர் 3D ப்ரின்டிங் நுட்பத்தின்மூலம் அந்த நியாண்டர்தால் பெண்ணின் முழு முகத்தையும் கொண்டு வந்துள்ளனர். அதில் பழுப்பு நிறக் கூந்தல், முக சருமம், கழுத்துத் தோல்கள் என அனைத்தையும் உருவாக்கியுள்ளனர்.இப் பெண்ணின் முகத்திற்கும், தற்போது இருக்கும் நமது முகத்திற்கும் அதிகமான புருவ வளைவு, ஒடுங்கிய கண்ணங்கள் போன்ற வேறுபாடுகள் நிறையவே உள்ளன. ஆனாலும், நமது DNA-வும் அவர்களுடைய DNA-வும் சற்று ஒத்துப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Recent News