Monday, December 23, 2024
HomeLatest Newsஈழத்தமிழர்கள் இல்லாவிட்டால் இந்தியாவால் ஒருபோதும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முடியாது! – பிரித்தானியா அரசியல் ஆய்வாளர்

ஈழத்தமிழர்கள் இல்லாவிட்டால் இந்தியாவால் ஒருபோதும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முடியாது! – பிரித்தானியா அரசியல் ஆய்வாளர்

யாழ்.பலாலி விமான நிலையத்தினை மூடுவதானது தமிழர் தரப்பை பொறுத்தவரையில், தமிழரின் நிலப்பகுதியை சுவீகரித்து அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரிக்கும் முயற்சியாகவே உள்ளதுடன், தமிழ் மக்களுக்கு இது தேவையற்றது எனவும் பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் இல்லாவிட்டால் இந்தியாவினால் ஒருபோதும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதன் காரணமாகவே இந்தியா தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவி செய்து வருகின்றது.

அதாவது, ஈழத்தமிழர்கள் வடகிழக்கில் தனது ஆதிக்கத்தை இழக்கும் போது இந்தியாவும் இலங்கையில் தனது ஆதிக்கத்தை இழந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய தலைவர்களை பொறுத்தவரையில், இந்தியாவிற்கு ஒரு தேவை ஏற்படும் போது அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பு மண்டலமான தென்னகத்தை நோக்கி கவனம் செலுத்துவதுடன், எந்நேரமும் தென்னகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துக்கொள்ள இந்திய தலைவர்கள் முயற்சிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் நோக்கமாகவே இந்திய தலைவர்கள் தென்னகத்திற்கு வருதை தந்து தமிழ் மக்களை பற்றியும், தமிழ் பகுதிகளை பற்றியும் புகழ்ப்பாடுகின்றனர் என்றும் குறிப்பட்டுள்ளார்.

Recent News