Thursday, January 23, 2025
HomeLatest Newsஇலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடுமையாகும் விதிமுறைகள்!

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடுமையாகும் விதிமுறைகள்!

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான கடுமையான  நடத்தை விதிமுறைகளை அறிமுகப்படுத்த விளையாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் தவறான செயற்பாடு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சிற்கும் துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்தரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேலும் 12 விடயங்களை ஆராயவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

முறையான அனுமதியின்றி இரவு நேரத்தில் அணியை விட்டு வெளியே சென்ற வீரர்கள், சுற்றுப்பயணத்தின் போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டமை,  பயிற்சியாளர், மேலாளர் மற்றும் அணித் தலைவர் ஆகியோர் வீரர்களின் ஒழுக்கம் தொடர்பான தங்கள் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றினார்களா என்பது குறித்து ஆராய்தல், ஒரு அதிகாரப்பூர்வ அழைப்பு மாத்திரம் கிடைத்த போதிலும் வீரர்கள் எப்படி 16 விருந்துகளில் கலந்து கொண்டனர் என்பன உட்பட 12 விடயங்களை ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Recent News