Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஅமெரிக்க- இந்திய உறவு குறித்து வெள்ளை மாளிகை கருத்து..!

அமெரிக்க- இந்திய உறவு குறித்து வெள்ளை மாளிகை கருத்து..!

பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு ஒரு மாதம் ஆகியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா – இந்தியா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவில் வலுப்பெற்றுள்ளது என்று வெள்ளை மாளிகையில் புதன்கிழமை அதிபா் ஜோ பைடன் சாா்பில் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர விருந்து நிகழ்வில் பங்கேற்ற போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்னணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மோடி அமெரிக்கா சென்றிருந்த நிலையில் வெள்ளை மாளிகை வளாக புல்தரையில் 8,000-க்கும் அதிகமான இந்திய அமெரிக்கா்கள் கூடியிருக்க அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஆற்றிய உரையையும் அவா்கள் பாராட்டினா்.

இந்த விருந்தில் பங்கேற்ற, இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா பயணம் மேற்கொண்ட பின்னா் இந்தியாவையும், பிரதமா் மோடியையும் கடுமையா விமா்சித்து வந்த செனட் உறுப்பினரான சக் ஸ்கூமா் தற்போது பிரதமா் நரேந்திர மோடியை எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதுபோல, வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற வழக்கமான பத்திரிகையாளா் சந்திப்பின்போது பேட்டியளித்த வெள்ளை மாளிகை செயலா் கெரின் ஜீன் பீரி, ‘பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் மேற்கொண்ட அமெரிக்க பயணம் வெற்றிகரமானது மட்டுமின்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மூலமாக இரு நாடுகளிடையேயான உறவு முன்னெப்போதும் அல்லாத அளவில் வலுப்பெற்றுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

‘பிரதமா் வருகையின்போது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் அமெரிக்கா சாா்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் சில ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டன. இந்தியாவுடனான இந்த உறவு நீண்டகால உறவாக தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்..

Recent News