Friday, May 17, 2024
HomeLatest NewsWorld Newsதிடீரென மயமான சீன வெளிவிவகார அமைச்சர் வலுக்கும் சந்தேகம்..!

திடீரென மயமான சீன வெளிவிவகார அமைச்சர் வலுக்கும் சந்தேகம்..!

சீன ஜனாதிபதியாக செயற்படும் ஜிஜிங்பிங் இன் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக குய்ன் காங் செயற்பட்டு வருகிறார்.

இவர் கடந்த மாதம் 24 ஆம் திகதி முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும், செய்தியாளர்களை சந்திக்காமலும், ஜனாதிபதியின் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்காமலும் இருந்துள்ளார்.

இதனையடுத்து அவர் திடீரென காணாமல்போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜூன் 25 ஆம் திகதி ரஷ்யா, வியட்நாம் மற்றும் இலங்கை நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்து பொது வெளியில் வரவில்லை என்பதோடு மாஸ்கோவிற்கு எதிரான வாக்னர் கூலிப்படைக் குழுவின் கைவிடப்பட்ட கிளர்ச்சிக்கு 48 மணி நேரத்திற்குள் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்த ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ உடனான சந்திப்பின்போதே அரச ஊடகத்தில் அவர் இறுதியாக தோன்றியுள்ளார்.

அத்துடன் ஜூலை 4 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் மற்றும் குய்ன் காங் ஆகியோருக்கிடையிலான திட்டமிடப்பட்ட சந்திப்பு எவ்வித விளக்கமும் இல்லாமல் சீனாவால் ரத்து செய்ய பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தைகைய காரணங்களால் சீனா தொடர்பில் உலக நாடுகள் மத்தியில் சந்தேகம் வலுத்துள்ளது.

Recent News