Monday, April 29, 2024
HomeLatest Newsயாழ் தமிழரின் கடையில் கைவரிசை காட்டியவருக்கு நேர்ந்த நிலை!

யாழ் தமிழரின் கடையில் கைவரிசை காட்டியவருக்கு நேர்ந்த நிலை!

பிரித்தானியாவில் கிரந்தத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் நடத்தி வரும் சுப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Hornsby வீதியில் உள்ள Costcutter கடையின் அலமாரிகளில் இருந்து 50 பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்களை ஒரு கூடைக்குள் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் வெளியேறும் பாதையை நோக்கி கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் நடந்து செல்வதனை கடையில் பணியாற்றிய Mathan Sabba என்பவர் அவதானித்து அவருடன் மோதலில் ஈடுபட்டு பொருட்களை மீட்டு எடுத்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் Aaron Kelly என்ற 39 வயதுயடைவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையி்ல் அவர் மீது தாக்குதல் மற்றும் திருட்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பவம் அங்காடியில் இருந்த சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ளது. லிங்கன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Kelly டிசம்பர் மாதம் 8ஆம் திகதி அன்று பொருட்கள் திருடப்பட்டதையும், கடையில் ஒரு ஊழியரை அடித்துத் தாக்கியதற்காகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, கெல்லிக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, இதில் திருட்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட ஆறு மாத இடைநிறுத்தப்பட்ட தண்டனையும் அடங்கும்.

அத்துடன் 50 பவுண்ட் இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recent News