Tuesday, April 30, 2024
HomeLatest NewsWorld Newsசீனாவுடன் போட்டியை விரும்புகிறோம்; மோதலை அல்ல: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விளக்கம்..!

சீனாவுடன் போட்டியை விரும்புகிறோம்; மோதலை அல்ல: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விளக்கம்..!

அமெரிக்காவுககும், சீனாவுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் இருந்து வருகிறது.குறிப்பாக தைவான் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டை சீனா விரும்பவில்லை.அத்துடன் அந்நாட்டுடன் வர்த்தக ரீதியிலும் பிரச்சினை இருந்து வருகிறது.இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

சீனாவுடன் அமெரிக்கா போட்டியை விரும்புகிறது,மோதலை அல்ல. சீனாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற அமெரிக்கா வலுவான நிலையில் உள்ளது.”சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம், தைவான் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக நிற்கிறோம். இந்தியாவுடனான கூட்டாண்மைக்கு எங்கள் ஆட்சியில் புத்துயிர் அளித்துள்ளோம். சீனா முன்னேறி வருகிறது, அமெரிக்கா பின்தங்குகிறது என்று சிலர் கூறுகிறார்கள். அமெரிக்கா தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலகின் சிறந்த பொருளாதாரத்தை அமெரிக்கா கொண்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

Recent News