பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருக்கும். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு இன்றைய காலத்தில் பொடுகு, முடி உதிர்தல் மற்றும் போன்ற முடி தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
இதற்கு சந்தையில் கிடைக்கும் பல தலைமுடி பராமரிப்பு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது தற்காலிகம் தான்.
இதனை இயற்கைமுறையில் கூட தீர்வு காண முடியும். தற்போது முடியை அடர்த்தியாக வளர வைக்க சூப்பரான டிப்ஸ் ஒன்றை அறிந்து கொண்டு அதனைப் பின்பற்றுவோம்.
தேவையான பொருட்கள்
தூள் செய்யப்பட்ட மருதாணி – 4 டேபிள் ஸ்பூன் தூள்
முட்டை – ஒன்று
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
ஒரு கப் வெதுவெதுப்பான நீர்
இதனை எப்படி பயன்படுத்துவது ? என்பதை அறிந்து கொள்வோம்.
வெதுவெதுப்பான நீரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
கலந்த கலவையை உங்கள் உச்சந்தலையிலும், முடியிலும் தடவி இரண்டு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின் ஷாம்பு போட்டு முடியை அலசி வந்தால் நல்ல பலனை பெறலாம்.
இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
மருதாணி மற்றும் எலுமிச்சை கலந்த ஹேர் மாஸ்க் மயிர்க்கால்களை பலப்படுத்துவதோடு, அடர்த்தியான முடி வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
சந்தைகள்,வெளிப்புறங்களில் கெமிக்கல் பொருட்களை வாங்காமல்,இயற்கை முறையில் இந்ந டிப்ஸை நீங்களும்,குடும்ப அங்கத்தவர்கள்,நண்பர்கள் அனைவரும் பயன்படுத்தி கூந்தலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் கூந்தலையை நீளமாக அழகாக வைத்திருப்போம்.