Monday, April 29, 2024
HomeLatest Newsஇதை மட்டும் பண்ணிடுங்க! உங்க கணனி ரொம்ப வேகமாக வேலை செய்யும்

இதை மட்டும் பண்ணிடுங்க! உங்க கணனி ரொம்ப வேகமாக வேலை செய்யும்

கணனிகள் வேகமாக செயற்பட வேண்டும் என்பதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பதாக காணப்படுகின்றது.அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் கணனியை வேகமாக்குவதற்கு சில ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

உங்களது இணைய உலாவி அல்லது பிரவுசரில் பல்வேறு தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கின்றது.

நீங்கள் பிரவேசிக்கும் இணைய தளங்கள், உங்களது கடவுசொற்கள், உலாவி வரலாறு, தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்புக்கள் என்பன பல தரவுகள் இவ்வாறு சேமிக்கப்பட்டிருக்கும்.

இந்த தகவல்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் காரணத்தினால் கணனியின் வேகம் குறைவடையும்.

இதனால் உலாவியின் கேச், கூக்கீஸ், மற்றும் காலத்திற்கு காலம் அழித்துவிடவேண்டும்.

கூக்கீஸ், கேச் மற்றும் இணைய வரலாறு நீங்கள் இணைய தளமொன்றக்குள் பிரவேசிக்கும் போது நீங்கள் கூக்கிஸ் பொப்அப் ஆவதனை அவதானித்திருப்பீர்கள்.இந்த கூக்கீஸ் கோப்புக்கள் நீங்கள் பிரவேசிக்கும் இணைய தளங்களினால் உருவாக்கப்படுபவை.

நீங்கள் அடிக்கடி இணைய தளத்திற்குள் பிரவேசிக்கும் போது இலகுவில் பிரவேசிக்கும் நோக்கில் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.

உலாவி கேச் பக்கங்களின் பகுதிகளை நினைவில் வைத்துக் கொள்கின்றது. இது உலாவியில் அடுத்த தடவை இணைய தளத்திற்கு பிரவேசிக்கும் போது வேகமாக லோட் செய்வதனை உறுதிப்படுத்துகின்றது.

நீங்கள் கடந்த காலங்களில் பிரவேசித்த இணைய தளங்களின் வரலாறு உலாவி வரலாறு என அழைக்கப்படுகின்றது.

இவற்றை அந்தரங்கமாக பேண வேண்டுமாயின் நீங்கள் கிளியர் ஹிஸ்ட்ரி ஆப்சனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

உலாவி கேச், கூக்கீஸ் மற்றும் வரலாறு என்பனவற்றை எவ்வாறு அழிப்பது.

கூகுள் க்ரோமில்..(Google Chrome)

உங்களது கணனியில் கூகுள் க்ரோமை திறக்கவும் பின்னர் வலதுபக்க மேல் மூலையில் காணப்படும் மூன்று டொட் குறியீட்டை அழுத்தவும்.

  1. More Tools என்பதனை தெரிக Clear Browsing Data.
  2. அனைத்து பெட்டிகளையும் அடையாளம் இடுக browsing history, download history, cookies மற்றும் other site data.
  3. நீங்கள் Basic Settings ஐ கிளிக் செய்து அனைத்தையும் ரீசெக் செய்ய முடியும். பின்னர் time range என்ற ட்ரொப் டவுன் மெனுயுவை அழுத்தி உங்களுக்கு விருப்பமான வகையில் தெரிவு செய்ய முடியும். cache, ஐ கிளியர் செய்ய வேண்டுமாயின் All time என்பதனை கிளிக் செய்யவும்
  4. இறுதியாக Clear data என்பதனை அழுத்தவும்

சப்பாரியில் (Safari)

  1. நீங்கள் சப்பாரி பயன்படுத்தினால் டொப் மெனுயுவிற்கு சென்று என்பதனை தெரிவு செய்க அங்கு History > Clear History. என்பதனை அழுத்தவும்
  2. தற்பொழுது எவ்வளவு காலத்திற்கு அழிக்க வேண்டும் என்பதனை தெரிவு செய்து Clear History என்பதனை கிளிக் செய்யவும்
  3. உங்களது அனைத்து உலாவி ஹிஸ்ட்ரியும் கேச்சும் அழிந்துவிடும்

மொஸிலாவில் (Mozilla Firefox)

  1. மொஸிலாவை திறந்து வலதுபக்க மேல் மூலையில் hamburger menu என்பதனை தெரிவு செய்க
  2. Privacy and Security என்னும் ஆப்சனை தெரிவு செய்க Cookies and Site Data ஸ்கோரல் செய்க
  3. மொஸிலா க்ளோஸ் செய்யப்பட்டதும் அனைத்தையும் கிளியர் செய்க என்ற செக் பொக்ஸை தெரிவு செய்க (Delete cookies and site data when Firefox is closed) பின்னர் Clear Data என்பதனை தெரிவு செய்க ஒரு தடவை ஹிஸ்ட்ரி கிளியர் செய்யப்பட்டதன் பின்னர், இணைய தளங்களுக்கு பிரவேசிப்பதற்கு லொக் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News