பிரித்தானியாவில் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதமர் “பொரிஸ் ஜோண்சனின்” இடத்திற்கு புதிய நபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் வாக்கெடுப்பின் முடிவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் பொருளாதார அமைச்சர் “ரிஷி சுனக்” என்பவரும் “லிஸ் ட்ரஸ்” என்னும் பெண்மணியும் மேற்படி ‘பொரிஸ் ஜோண்சனின்’ பிரதமர் பதவிக்கான இடத்தை நிரப்பப் போகும் ஒருவராக இருப்பார் என்பதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் பிரதமராக தெரிவு செய்யப்பட்டவர் மகாராணியாரை சந்தித்து தனது பிரதமர் ஆட்சிக்குரிய அதிகாரத்தையும், அனுமதியையும் பெற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
வழமையாக மகாராணியார் முடிவுகள் அறிவிக்கப்படும் இடத்திற்கு நேரில் வருகை தந்து அதிகாரத்தை கையளிப்பார். ஆனால் இந்த முறை தெரிவு செய்யப்படும் நபர் மகாராணியாரின் இருப்பிடம் சென்று அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை புதிய நபர் அறிவிக்கப்படும் வரை பதவி விலக்கப்பட்ட பிரதமர் ‘பொரிஸ் ஜோண்சன்’ தொடர்ந்தும் பிரதமர் பதவியில் நீடிப்பார் என்றும் பிரித்தானிய செய்திகள் தெரிவித்துள்ளன.