Sunday, May 19, 2024
HomeLatest Newsதாய்வானுக்கு ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா

தாய்வானுக்கு ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா

தாய்வான் தற்பொழுது தனது இராணுவத்தை கட்டமைத்து வருகின்ற நிலையில் அமெரிக்காவின் உதவிகள் பல கிடைத்துக் கொண்டு இருக்கின்ற சூழல் காணப்படுகின்றது.

அண்மையில் அமெரிக்க சிறப்பு படைப் பிரிவினர் தாய்வானில் இராணுவ கட்டமைப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அமெரிக்கா சுமார் 1.1 பில்லியன் பெறுமதியிலான ஆயுதங்களை தாய்வானுக்கு அனுப்புவதற்கான முடிவை எடுத்திருப்பதாகவும் இதற்கான அனுமதியை வெள்ளை மாளிகை வழங்கியிருப்பதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆயுதப் பொதியில் அதி நவீன ரேடர் கருவிகள், அதி நவீன ஏவுகணைகள், நீண்ட தூர மற்றும் குறுந்தூர ஏவுகணைகள் என பல ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உதவிகள் தாய்வானுக்கு சீனாவினால் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் எல்லை குழப்பங்களை தடுத்து நிறுத்துவதற்கும் அவற்றை கண்காணிப்பதற்கும் உதவும் என அமெரிக்காவின் இராணுவ தலைமையகம் அமைந்து பென்டகனின் செய்திக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

Recent News