Saturday, May 4, 2024
HomeLatest Newsவிளாடிமிர் மற்றும் நான் என்று விழித்த பைடன்…!நேட்டோ உச்சி மாநாட்டில் சலசலப்பு…!

விளாடிமிர் மற்றும் நான் என்று விழித்த பைடன்…!நேட்டோ உச்சி மாநாட்டில் சலசலப்பு…!

நேட்டோ உச்சி மாநாட்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை, ரஷ்ய அதிபர் புடின் என்று தவறுதலாக குறிப்பிட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்பின் 31 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் நேற்றைய தினம் லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரில், இரண்டு உச்சி மாநாட்டிற்காக கூடியுள்ளனர்.

அந்த வகையில், இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டை நேட்டோவில் இணைத்து கொள்வதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உட்பட பல நாட்டினர் எதிர்பார்த்துள்ளனர்.

ஆயினும், நேட்டோ தலைவர்கள் உக்ரைன் எதிர்காலத்தில் தான் இந்த கூட்டணியில் சேர முடியும் என்று மட்டுமே கூறியுள்ளனர்.

அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் பைடன், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை, ரஷ்ய அதிபர் புடின் என்று குழப்பி அவரை விளாடிமிர் என்று குறிப்பிட்டமையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர், தன்னை தானே சுதாகரித்து கொண்ட பைடன் , உடனடியாக திருத்திக் கொண்டு ஜெலென்ஸ்கி என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, ‘விளாடிமிர் மற்றும் நான்’ என்று கூறிய பைடன், தவறுதலாக கூறிய சில நொடிகளில் தன்னைத் திருத்திக் கொண்டு, ‘ஜெலென்ஸ்கியும் நானும், உக்ரைனில் இருந்த போதும் மற்ற இடங்களில் நாங்கள் சந்தித்த போதும் செய்யக்கூடிய உத்தரவாதங்களைப் பற்றி பேசினோம்’ என்று கூறியுள்ளார்.

இது குறித்த காணொளிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Recent News