Monday, December 23, 2024
HomeLatest Newsவிஜய்யின் வாரிசு பட முதல் பாடலுக்கே வந்த சிக்கல் - சோகத்தில் ரசிகர்கள்

விஜய்யின் வாரிசு பட முதல் பாடலுக்கே வந்த சிக்கல் – சோகத்தில் ரசிகர்கள்

விஜய்யின் வாரிசு திரைப்படம்

தெலுங்கு இயக்குனர் வம்சி பாடிபல்லி இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடிக்கும் படம் தான் வாரிசு. பொதுவாக தெலுங்கு சினிமா படங்களில் அதிக சென்டிமென்ட் காட்சிகள் இருக்கும்.

இந்த வாரிசு படமும் குடும்பம், எமோஷன் கலந்து படமாக இருக்கும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது, அதற்கு ஏற்றார் போல் இந்த படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். ஷ்யாம், சரத்குமார், சம்யுக்தா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

படத்தின் ஃபஸ்ட் மற்றும் சமீபத்தில் முதல் பாடல் வெளியாகி இருந்தது. விஜய் பாடிய இந்த ரஞ்சிதமே பாடல் ரசிகர்களின் பேவரெட் லிஸ்டில் ஏற்கெனவே இணைந்துவிட்டது.

முதல் பிரச்சனை

இப்பாடலில் உச்சு கொட்டும் நேரத்திலே உச்சகட்டம் தொட்டவளே என்ற வரிகளுக்கு கடும் எதிர்ப்பு வந்துள்ளது.

விஜய் போன்ற நடிகர்களின் பாடல்களை சிறுவகர்கள் கூட விரும்பி பாடுவார்கள், அப்படி இருக்க இதுபோன்ற வரிகளை விஜய் எப்படி எழுத அனுமதித்தார், சமூக பொறுப்பு வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Recent News