Monday, December 23, 2024
HomeLatest Newsபிக்பாஸ் நிகழ்ச்சியை கோபத்துடன் கழுவி ஊற்றிய வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியை கோபத்துடன் கழுவி ஊற்றிய வனிதா

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6வது சீசன் தொடங்கி தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுவரை இல்லாத விதமாக 24 மணி நேரமும் பிக் பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு ஆகி வருகிறது.

இதேவேளை  பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் தினம் தினம் நேர்காணல் மூலம் அதுகுறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்தும் பேசி வருகிறார்கள். 

குறிப்பாக முன்னைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கெடுத்த நடிகை வனிதா மற்றும் நடிகர் பையில் வான் ரங்கநாதன் ஆகியோர் இதைப்போன்ற நேர்காணலில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் மிகவும் கோபப்பட்டு வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். 

இது குறித்து கோபமாக பேசிய அவர் “ நீ முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு ஒழுங்காக என்னிடம் கேள்வியை கேள். நாய் மாதிரி பின்னாடி சுத்தறவங்கள பற்றி மற்றும் தான் கேட்கிறாய்.”

இவங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவு இல்ல…கன்றாவி புடிச்ச நிகழ்ச்சி..அதில் கலந்து கொண்டவர்கள் கன்றாவி பிடித்த போட்டியாளர்கள் இதை நான் 1 மணி நேரம் பார்த்துவிட்டு அதைப்பற்றி எதற்கு பேசவேண்டும். எனக்கு ஷூட்டிங் இருக்கிறது..எனக்கு அக்கா அக்கா என்று பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை நான் ஏமாற்றுவதுபோல இருக்கிறது” என கோபத்துடன் வனிதா பேசிவிட்டு கிளம்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News