Thursday, March 28, 2024
HomeLatest NewsWhatsapp Business பயனாளர்களுக்கு புதிய வசதிகள் அறிமுகம்!

Whatsapp Business பயனாளர்களுக்கு புதிய வசதிகள் அறிமுகம்!

Whatsapp Business பயன்படுத்தும் பயனர்களுக்கு இனி Communities மற்றும் Search போன்ற ஆப்ஷன் வசதிகள் கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் அப்டேட் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.

இதில் தனித்தனியாக நாம் தேடல் செய்ய முடியும். வங்கி சம்பந்தப்பட்ட விஷயங்கள், பயணம், போன்றவற்றை நாம் Search box உள்ளே Search செய்து அது சம்பந்தப்பட்ட விஷயங்களை தேடலாம்.

இந்த அப்டேட் தற்போது பிரேசில், கொலம்பியா, இந்தோனேஷியா, மெக்சிகோ, UK ஆகிய நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நாடுகளுக்கும் இந்த அப்டேட் வெளியிடப்படும்.

இந்த புதிய வசதி மூலமாக இனி சுலபமாக நமது வணிக தேவைக்காக இந்த செயலியை பயன்படுத்தலாம். இதைத்தவிர நேரடியாக பொருட்களை ஷாப்பிங் செய்யவும் முடியும்.

இது Jiomart Shopping போலவே வேலை செய்யும். வரும் காலத்தில் இந்த வசதி அணைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் என்று MEta தெரிவித்துள்ளது. இதில் பயனர்களின் விவரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளது.

ஏற்கனவே வாட்ஸாப் நிறுவனம் அதன் Communities வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய செயலிகளுக்கு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இனி நாம் 32 வரை ஒரே நேரத்தில் வீடியோ காலிங் பேசமுடியும்.

Recent News