Monday, December 23, 2024
HomeLatest Newsவில்லனாக அறிமுகமாகும் வடிவேலு!

வில்லனாக அறிமுகமாகும் வடிவேலு!

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.


மேலும், சந்திரமுகி -2, மாமன்னன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் வடிவேலு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, “ஜி.வி.பிரகாஷ் அடுத்து ‘தில்லுக்கு துட்டு’ பட இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் வடிவேலுவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

Recent News