Sunday, April 20, 2025
HomeLatest Newsஇலங்கையில் மின்சார வாகனங்களை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா உடன்படிக்கை

இலங்கையில் மின்சார வாகனங்களை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா உடன்படிக்கை

இலங்கையின் மின்சார வாகன தொழிற்துறையை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவொன்றிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அப் பதிவில் மேலும் குறிப்பிட்டதாவது,

வேகாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஹர்ஷ சுபசிங்க போன்ற இலங்கையின் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது, ஏனெனில் அவர்கள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறார்கள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Recent News