Sunday, May 5, 2024
HomeLatest Newsஅமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு பொருளாதார வளர்ச்சி!

அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு பொருளாதார வளர்ச்சி!

அமெரிக்காவின் செனட் சபையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் பைடனின் வருடாந்த இடைக்கால கணக்கெடுப்பிற்கான ஆயத்தங்கள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அதிபர் பைடன் தனது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளதாகவும், இதன் போது தென் கொரியாவின் முதலீடுகள் கடந்த காலங்களை விட தற்போது மிக அதிகளவில் காணப்படுகின்றதாகவும், தென்கொரியாவின் உற்பத்திகள் குறிப்பாக தொழிநுட்ப சாதனங்கள் உட்பட பல உற்பத்திகள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அதிபர் பைடன், யப்பான், தென்கொரியா போன்ற நாடுகளினால் மாத்திரம் சுமார் 100 பில்லியன் பெறுமதியிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் அமெரிக்கா முதலீட்டாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான நாடு என்பதையும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.

தென் கொரியாவின் மேம்படுத்தப்பட்ட முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவாக இருக்கும் என்பதுடன் வடகொரியாவின் இராணுவ செயற்பாடுகளை முறியடிப்பதற்கு தென்கொரியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்பதையும் அதிபர் பைடன் குறிப்பிட்டிருந்தார்.

Recent News