Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஆயுதக்கிடங்கின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்-அரண்டுபோன ரஷ்யா..!

ஆயுதக்கிடங்கின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்-அரண்டுபோன ரஷ்யா..!

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது.

ஓராண்டை கடந்தும் ரஷ்ய உக்ரைன் போர் தீவிரமடைந்து உள்ள சூழலில், உக்ரைனின் கடல் துறைமுகங்களான ஒடிசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷியா தாக்கி உள்ளது என சமீபத்தில் உக்ரைன் குற்றச்சாட்டு கூறியது.

இந்த நிலையில், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது.இதுபற்றிய வீடியோவும் வெளியானது.

இதுபற்றி ரஷியாவால் நியமிக்கப்பட்ட அந்த கிடங்கின் தலைவரான செர்கே ஆக்சியோனோவ் என்பவர் கூறும்போது, ஆளில்லா விமானம் ஒன்று வெடிபொருள் சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியது.

இதனால், அதனை சுற்றி 5 கி.மீ. தொலைவில் உள்ள நபர்கள் ஒவ்வொருவரையும் வெளியேற்ற வேண்டிய உத்தரவை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதன் தொடர்ச்சியாக பல ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

இந்த தகவலை சி.என்.என். வெளியிட்டு உள்ளது. இதனால், ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை என அவர் கூறியுள்ளார்.

Recent News