உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ரஷ்யா இதுவரை 70 ஆயிரம் வீரர்களை இழந்துள்ளதாகத் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து The Centre for Strategic and International Studies என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா இழந்த வீரர்களின் எண்ணிக்கை, ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகள் நடத்திய போரை விட 35 விழுக்காடு அதிகம் என தெரிவித்துள்ளது.
அதோடு தற்போதைய போரில் உக்ரைனியர்களை விட 5 மடங்கு ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேவேளை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷ்யா துருப்புக்கள் அதிகமாக உயிரிழந்த சம்பவம் இதுவெனவும் கூறப்படுகின்றது.