Friday, December 27, 2024
HomeLatest Newsசட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயற்சி; இந்த ஆண்டில் மட்டும் 399 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயற்சி; இந்த ஆண்டில் மட்டும் 399 பேர் கைது

2022ஆம் ஆண்டு இதுவரையில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 399 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிப்பவர்களிடம் இருந்து கடத்தல்காரர்கள் 200,000 முதல் 1,000,000 வரை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த கடத்தல்காரர்கள் பழுதடைந்த மற்றும் உடைந்த படகுகளையும் சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நடவடிக்கையில் ஈடுபடும் கடத்தல்காரர்களுக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

Recent News