Tuesday, April 23, 2024
HomeLatest Newsமருத்துவ சான்றிதழுக்காக அறவிடப்படும் கட்டணம்; இலங்கையர்களுக்கு நடக்கும் மோசடி

மருத்துவ சான்றிதழுக்காக அறவிடப்படும் கட்டணம்; இலங்கையர்களுக்கு நடக்கும் மோசடி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெறுவதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.

குறித்த மக்களிடம், மருத்துவ சான்றிதழுக்கான கட்டணம் அதிகளவில் அறவிடப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

18 ஆயிரம் முதல் 38 ஆயிரம் வரையில் இதற்காக அறவிடப்படுவதுடன், தர சேவைக் கட்டணங்களும் வெகுவாக உயர்ந்த்துள்ளன.

அதிகளவான கட்டண அறவீடு தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் செயலாளர் எம்.எஃப்.எம் அர்ஷாத் தெரிவிக்கிறார்.

வேலைக்காக அல்லது வசிப்பதற்காக மேற்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் எவருக்கும் புறப்படுவதற்கு முன் உடல்நலப் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த பரிசோதனைகளை நடத்துவதற்கு இலங்கையில் 14 கிளினிக்குகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News